BakeMe Happy; உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக மகிழ்ச்சி நிறைந்த பேக்கிங் உலகிற்கு முதல் பயணம். பாடத்தின் முதல் moduleக்கு வரவேற்கிறோம்.
அன்புள்ள பேக்கிங் பிரியரே,
நீங்கள் எங்களுடன் சேர்ந்து இந்த இனிமையான பயணத்தில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தொடக்கத் தொகுதியில், ஆரோக்கியமான பேக்கிங்(Healthy Bakes), கொண்டாட்ட கேக்குகளை(Special Moments cake) உருவாக்குதல் மற்றும் Frostingக்கு அறிமுகம் செய்யப்படுவோம். பேக்கிங்கின் பற்பல சாராம்சங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இத்தருணத்தில், உற்சாகத்துடனும், ஆர்வத்துடன் உங்களின் பேக்கிங் படைப்பாற்றல்களை உருவாக்க தயாராகுங்கள்.
Healthy Bakes:
நம் ஆரோக்கியமான பேக்கிங் பிரிவில் ருசியாக மட்டுமல்ல, ஊட்டமளிப்பதாகவும் இருக்கும் bakes வகைகளை கற்றுக்கொள்ளப்போகிறோம். தானியங்களின் நர்குணம் நிறைந்த ‘No-whites’ cake முதல், ஆரோக்கியமான muffinsகளின் நறுமணம், streusel கேக்கின் ருசியான crunch என உங்கள் படைப்புகள் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருப்பதை உறுதிசெய்ய ஒவ்வொரு படியிலும் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம்.
Special Moments Cake:
வாழ்க்கையின் மகிழ்ச்சி மிக்க தருணங்களை மேலும் சிறப்பாக்க பொருத்தமான கேக்குகளை வடிவமைக்கும் கலையை சிறப்பு தருணங்கள் கேக் பிரிவு உங்களுக்குக் கற்பிக்கும். காபி மற்றும் சாக்லேட் அடுக்குகள் பிணைந்த நம்முடைய Rich Mocha கேக்கின் செழுமையில் ஒரு சிறந்த கொண்டாட கேக்கை உருவாக்கி மகிழ்ந்திடுவோம்.
Frosting:
நேர்த்தியான frostingயின் பங்கில்லாமல் எந்த கேக்கும் முழுமையடையாது. நம் frosting பிரிவு என்பது சாதாரண கேக்குகளை பன்மடங்கு உயர்ந்திடும் திறமையில் தேர்ச்சி பெறுவதற்கான உங்கள் நுழைவாயில். சாக்லேட் Ganacheன் வெல்வெட்டி நேர்த்தியை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள ரகசியங்களை இங்கு கற்றுக்கொள்ளுவோம்.
எனவே உங்களுக்குள் இருக்கும் பேக்கரை வெளிக்கொணரவும், பேக்கிங்இன் மாயாஜாலத்தை அனுபவிக்கவும் அன்புடனும் ஆர்வத்துடனும் தயாராகுங்கள். இந்த பயணத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றியடைய நாங்கள் உங்களுடன் இணைந்து படிப்படியாக வழிகாட்டுவோம்.
வாருங்கள், இந்த அற்புதமான பயணத்தை ஒன்றாகத் தொடங்குவோம்!
ஹேப்பி பேக்கிங்!
அன்பான வாழ்த்துக்கள்,
பிந்து